மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு மாறுதாலுனறும் வகையில் மாற்றிய சமூக ஆர்வலருக்கு பாராட்டு
மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த சமூக ஆர்வலர்க்கு பாராட்டு.
தேனி மாவட்டம் போடி தேவாரம் சாலையில் மனவளம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் சாலையில் ஆபத்தான நிலையில் சுற்றி திரிவதாக போடி அரசு மருத்துவமனை ஆர்த்தோ மருத்துவர் ராஜபாண்டியன் சமூக ஆர்வலர் ரஞ்சித் குமாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த விரைந்து வந்த ரஞ்சித் குமார் சாலையில் ஆபத்தான நிலையில் சுகாதாரமற்ற முறையில் இருந்த நபரை சுத்தம் செய்து புதிய ஆடைகளை அணிவித்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். போடி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை வழங்கப்பட்ட அந்த நபருக்கு பெரியகுளம் அரசு மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். போடி ஊரக காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெயலட்சுமி csr பதிவு செய்து பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கு உதவினார். ஆதரவற்ற நிலையில் சாலையில் கால் முறிந்து தவழ்ந்து கொண்டிருந்த நபரை மாறுதாலுனறும் சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் பெற்றும் தற்போது குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர் என் ரவியிடம் சிறந்த சமூக சேவைக்காக விருது பெற்ற ரஞ்சித் குமாரின் தொடர் சேவையை பொதுமக்களும் சமூக ஆர்வலரும் வெகுவாக பாராட்டினர்.
Next Story