சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருச்சி மண்டல அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு 

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருச்சி மண்டல அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு 

பாராட்டு 

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருச்சி மண்டல அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர் .

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வாட்டாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் விவசாயி. இவரது மகள் ஷிவானி. இவர் பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரில்லியன்ட் சிபிஎஸ்இ பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதி இருந்தார். இந்நிலையில் நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத்தேர்வில் 500 க்கு 487 மதிப்பெண்கள் பெற்று, திருச்சி மண்டல அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.

இதையடுத்து, பின்தங்கிய கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் திருச்சி மண்டல அளவில் முதலிடம் பெற்ற ஷிவானியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வந்த நிலையில், அவர் படித்த பள்ளியான பிரில்லியன்ட் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவி ஷிவானிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பள்ளியின் தாளாளர் சுப்பிரமணியன் மற்றும் முதல்வர் ஆனந்த், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மாணவி ஷிவானிக்கு பொன்னாடை அணிவித்து, கேடயம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story