குத்துச்சண்டை போட்டியில் பதக்கம்: மாணவருக்கு பாராட்டு
பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் தருமபுரி மாவட்டம் சப்தகிரி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி ஜனவரி 9 முதல் 13 வரை நடைபெற்றது.
இப்போட்டியில் ஸ்ரீ பிரகதாம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 10ம் வகுப்பு பயிலும் ஆ.ஹர்னிஸ் என்ற மாணவன் 66 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றதற்கான பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா அவர்களிடம் காண்பித்து வாழ்த்துக்களை பெற்றார்.
இந்நிகழ்வில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராசு, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகையன், பள்ளி தலைமையாசிரியர் இராஜேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், பள்ளித் துணை ஆய்வாளர் வேலுசாமி, உடற்கல்வி இயக்குநர் சண்முகநாதன், உடற்கல்வி ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் பள்ளி மேலாணமைக்குழு உறுப்பினர்கள் இராமு, அருணாசலம், ஆனந்தகுமரன் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டுக்களை தெரிவித்தனர்.