திருப்பூரில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு!

திருப்பூரில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு!

ஆசிரியர்களுக்கு பாராட்டு

திருப்பூரில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பாராட்டு தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 5 பயிற்சி மையங்களில், அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான பயிற்சியளித்த கல்வித்துறை அதிகாரிகள், நீட் தேர்வுப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. நீட் தேர்விற்காக மாணாக்கர்களுக்கு பயிற்சி அளித்துவரும் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பாராட்டு விழா திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இக்கல்வியாண்டில் அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கான நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளி, கே.எஸ்.சி அரசுப்பள்ளி, தாராபுரம், என்.சி.பி பள்ளி, உடுமலை, ஆர்.கே.ஆர் பள்ளி, பல்லடம், அரசு பெண்கள் பள்ளி என ஐந்து மையங்களில், கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை, சுமார் 40 நாட்கள் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட நீட் தேர்வுப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமையில், 25 ஆசிரியர்கள் இதற்காக நியமிக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 5 பயிற்சி மையங்களிலும் மொத்தம் 565 மாணாக்கர்கள் பயிற்சிகளை மேற்கொண்டனர். பாராட்டு நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், சப் கலெக்டர் செளமியா ஆனந்த், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்திலரசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, மாவட்டக் கல்வி அலுவலர் (உயர்நிலை) பக்தவத்சலம் மற்றும் உதவித் திட்ட அலுவலர் அண்ணாதுரை, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர். கல்வித்துறை அதிகாரிகள், நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் மற்றும் பயிற்சி அளித்த 25 ஆசிரியர்கள், 5 நீட் தேர்வுப் பயிற்சி மையத்தின் தலைமை ஆசிரியர்கள் என மொத்தம் 35 பேர் பேருக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ்பாராட்டு தெரிவித்து, சான்றிதழ், கேடயம் மற்றும் புத்தகம் வழங்கி சிறப்பித்தார்.

Tags

Next Story