குளச்சல் காணிக்கை மாதா திருத்தலத்தில் மெழுகுவர்த்தி பவனி

குளச்சல் காணிக்கை மாதா திருத்தலத்தில் மெழுகுவர்த்தி பவனி
X
குளச்சல் ஆலயத்தில் மெழுகுவர்த்தி பவனி
கன்னியாகுமரி மாவட்டம்,குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல மெழுகுவர்த்தி பவனி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டம், குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல 426-ம் ஆண்டு விழா கடந்த 26-ம் தேதி துவங்கி நடை பெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு திருப்பலி நடைபெற்றது.காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நற்கருணை ஆராதனை, மாலை 6 மணிக்கு புனித காணிக்கை அன்னையின் திருசப்ர பவனி நடந்தது. இதில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story