கண்டாச்சிபுரத்தில் குமார சஷ்டி விழா

கண்டாச்சிபுரத்தில் குமார சஷ்டி விழா

சித்தாத்துார் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் குமார சஷ்டி விழாவில், சுவாமிகள் சிறப்பு ஆலங்காரத்தில் காட்சியளித்தார்.


சித்தாத்துார் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் குமார சஷ்டி விழாவில், சுவாமிகள் சிறப்பு ஆலங்காரத்தில் காட்சியளித்தார்.

சித்தாத்துார் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் குமார சஷ்டி விழாவில், சுவாமிகள் சிறப்பு ஆலங்காரத்தில் காட்சியளித்தார். கண்டாச்சிபுரம் அடுத்த சித்தாத்துாரில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமிகள் கோவிலில் குமார சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. அதனையொட்டி, நேற்று காலை வீரவாகுத்தேவர்கள் ஊர்வலம் நடைபெற்றது.

தொடர்ந்து திருவாசக முற்றோதல் குழுவினர் பகல் உற்சவத்தில் பஜனைப் பாடல்களை பாடினர். அதிசூரன் வதை மற்றும் சூரபதுமன் சண்டை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனர். நாளை வெள்ளிக்கிழமை அன்று கம்பம் ஏறும் நிகழ்ச்சியும், சூரபதுமன் சம்ஹாரமும் நடைபெறும். ஏற்பாடுகளை சித்தாத்துார் பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story