குமரகோட்டத்தில் பாலாலயம் விமரிசை
கும்பாபிஷேகம்
குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் ராஜகோபுரம் மற்றும் உட்பிரகார சன்னிதிகளை 30 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்து கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் ராஜகோபுரம் மற்றும் உட்பிரகார சன்னிதிகளை 30 லட்சம் ரூபாய் செலவில், புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, உட்பிரகார சன்னிதி மற்றும் ராஜகோபுரம் திருப்பணி துவக்குவதற்கான பாலாலயம், கோவில் தலைமை அர்ச்சகர் சிவாச்சாயார் கே.ஆர்.காமேஸ்வர குருக்கள் தலைமையில், நேற்று காலை நடந்தது. பரிவார தெய்வங்களின் படங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், மஹா தீப ஆராதனை நடந்தது. பாலாலய விழாவில் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், சரக ஆய்வர் பிரித்திகா, ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் குமாரகாளத்தி, கச்சபேஸ்வரர் கோவில் ஓதுவார் தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்."
Next Story