குமாரபாளையம் : எய்ட்ஸ் விழிப்புணர்வு மனித சங்கிலி

குமாரபாளையம் : எய்ட்ஸ் விழிப்புணர்வு மனித சங்கிலி

எய்ட்ஸ் விழிப்புணர்வு மனித சங்கிலி  

குமாரபாளையத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மனித சங்கிலி நடத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மனித சங்கிலி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடத்தப்பட்டது. தலைவர் சந்திரன், தனியார் கல்லூரி தலைவர் ஜெயசீலன் தலைமை வகித்தனர். எய்ட்ஸ் தடுப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாதைகள் கைகளில் ஏந்தியவாறு மாணவியர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இது பற்றி பேராசிரியர்கள் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி, தொற்றுள்ள கர்ப்பிணி பெண்களிடமிருந்து குழந்தகளுக்கு பரவும், ஊசிகள் பகிர்தல் மூலம் பரவும், பரிசோதிக்கப்படாத இரத்த பரிமாற்றம் முறை மூலம் பரவும், பச்சை குத்துதல், கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல் ஆகியன மூலம் எய்ட்ஸ் பரவும் என்று எடுத்துரைத்தனர். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உரிமம் பெற்ற ரத்த வங்கியின் மூலம் ரத்தம் பெறுதல், ஒருமுறை ,மட்டுமே ஊசியை பயன்படுத்துதல், கர்ப்பிணி பெண்கள் எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்வதால், குழந்தைக்கு எச்.ஐ.வி. வராமல் தடுக்கலாம், என்பது உள்ளிட்ட கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன. ரோட்டரி நிர்வாகிகள் செயலர் மூர்த்தி, முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story