குமாரபாளையம் : இந்திய கலாச்சாரங்கள் குறித்து அறிய வந்த புத்த துறவிகள்

குமாரபாளையம் : இந்திய கலாச்சாரங்கள் குறித்து அறிய வந்த புத்த துறவிகள்

புத்த துறவிகள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திற்க்கு இந்திய கலாச்சாரங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டி புத்த துறவிகள் வந்தனர். இந்திய கலாச்சாரம் என்பது பெரும்பாலான வெளிநாட்டவர்களால் விரும்ப கூடியது. மதுரை, பழனி, மகாபலிபுரம், சிதம்பரம், தஞ்சை, திருவண்ணாமலை, அறுபடை வீடுகள், உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சுற்றுலாவாக பல வெளிநாட்டவர்கள் வருகிறார்கள். இந்திய காலச்சாரம் குறித்து அறிந்து கொள்ள பூட்டான் நாட்டிலிருந்து, திம்பு பகுதியை சேர்ந்த புத்த துறவிகள் 13 பேர் குமாரபாளையம் வந்தனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள புத்தர் கோவிலில் வழிபாடு நடத்தினர். நகரில் உள்ள பல்வேறு கோவில்கள், முக்கிய இடங்கள் சென்றவர்கள் தமிழறிஞர்கள், ஆன்மீகவாதிகள் பலரை சந்தித்து கலந்துரையாடினார்கள். குமாரபாளையம் சத்தியத்தின் சக்தி நிலை சங்க நிர்வாகி மதிவாணனை சந்தித்து உரையாடினர்

Tags

Next Story