குமாரபாளையம் : மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலி

குமாரபாளையம் அருகே விவசாய நிலத்தில் உள்ள யூக்லிப்ட்ஸ் மரத்தின் மீது மின் கம்பிகள் உரசி சொல்வதை தடுக்க முயற்சி செய்த போது மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள குள்ள நாயக்கன்பாளையம் சானாங்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஒரு பகுதியில் கால்நடை தீவனங்கள் பயிரிட்டும் இன்னொரு பகுதியில் யூகலிப்ஸ்ட் மரங்கள் வளர்த்து வருகிறார். இவரது யூக்லிப்ட்ஸ் மரங்கள் தற்பொழுது சுமார் 13 அடி உயரத்திற்கு மேல் வளர்ந்துள்ளதால் அருகில் சென்ற மின்சார கம்பிகளில் மரங்கள் உரசிபடி இருந்ததால் அந்த மரங்களை அகற்றுவதற்காக தங்கவேலின் மனைவி சரஸ்வதி மரங்களின் கிளைகளை இரும்பு கம்பி கொண்டு இன்று காலை வெட்டினார் .

அப்பொழுது எதிர்பாராத விதமாக மின் கம்பி மீது இரும்பு கம்பி பட்டதால் சரஸ்வதி மீது மின்சாரம் பாய்ந்ததால் அவர் அலறிய சத்தம் கேட்டு தங்கவேல் ஓடி சென்று அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார் இதில் இருவருமே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர் இருவரின் குரல் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடிவந்து பார்த்த பொழுது இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக மின்சார வாரியத்திற்கும் குமாரபாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர் இதனை அடுத்து விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து பின்னர் இருவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Tags

Read MoreRead Less
Next Story