குமாரபாளையத்தில் அலகு குத்தியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் !
கோயில் திருவிழா
குமாரபாளையம் காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற விமான அலகு குத்தியபடி வந்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காளியம்மன் கோவில் மகா குண்டம், தேர்த்திருவிழா நடந்து வருகிறது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற்ற குண்டம் இறங்குதல், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல் என பல வழிகளில் நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள். அழகு குத்துதலில் நாக்கில் அலகு குத்துதல், பக்கவாட்டில் அழகு குத்துதல், நீளமான அலகை கன்னங்களில் குத்துதல், மற்றும் முதுகில் அலகு குத்திக்கொண்டு தொங்கியபடி வரும் விமான அலகு என பல வகைகளில் வேண்டுதல் நிறைவேற்றி வருகிறார்கள். நேற்று ஏராளமான பேர் விமான அலகு குத்தியபடி, கிரேன் உதவியுடன் தொங்கியபடி வந்தனர். பேண்டு வாத்தியங்கள் முழங்க, ஆட்டம் ஆடியவாறு பக்தர்கள் ஆடி வர, விமான அலகு குத்தியபடி பக்தர்கள் வந்ததை. சாலையின் இரு புறமும் பொதுமக்கள் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர். இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பக்தர்களை விரைவில் செல்ல அறிவுறுத்தி, போலீசார் போக்குவரத்தை சீர்படுத்தினர்.
Next Story