டூவீலர் மெக்கானிக்குகள் சார்பில் தீர்த்தக்குட ஊர்வலம்
தீர்த்தக்குட ஊர்வலம்,
குமாரபாளையம் காளியம்மன் கோவில் மகா குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவையொட்டி டூவீலர் மெக்கானிக்குகள் சங்கத்தினர் தீர்த்தக்குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் மகா குண்டம், தேர்த்திருவிழா சில நாட்கள் முன்பு நடந்தது. தினமும் ஒவ்வொரு சமுயத்தினர் சார்பிலும், ஒவ்வொரு தொழில் நிறுவன சங்கத்தார் சார்பிலும் சிறப்பு வழிபாடுகள், அம்மன் திருவீதி உலா ஆகியன நடந்து வருகிறது. நேற்று குமாரபாளையம் இருசக்கர வாகன பழுது பார்ப்போர், உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் மேளதாளங்களுடன் எடுத்து வரப்பட்டன. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story