முத்து முனியப்பன் சுவாமி கும்பாபிஷேக விழா

முத்து முனியப்பன் சுவாமி கும்பாபிஷேக விழா

முத்து முனியப்பன் சுவாமி கும்பாபிஷேக விழா

தினசரி காய்கறி மார்க்கெட் முத்து முனியப்பன் சுவாமி கும்பாபிஷேக விழாவில் தீர்த்தக்குட ஊர்வலம்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் முத்து முனியப்பன் சுவாமி கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

காவிரி ஆற்றில் இருந்து மேள, தாளங்கள் முழங்க மஞ்சள் ஆடை அணிந்தவாறு, பெண்கள் ஏராளமான பேர் தீர்த்தக்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை 9மணியளவில் சுவாமிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை மார்க்கெட் சங்க தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் விஸ்வநாதன், சீனிவாசன், சீனி, ரங்கசாமி, சக்கரபாணி உள்ளிட்டோர் செய்தனர். கும்பாபிஷேக விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story