ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரி மனு வழங்கல்

ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரி மனு வழங்கல்

ஆட்சியரிடம் மனு

தூசூர் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என பகுதியை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேந்தமங்கலம் அடுத்துள்ள தூசூர் பகுதி ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு ஒன்று வழங்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது கடந்த 18.6.2023 அன்று தூசூர் ஏரியில் கலக்கும் கழிவு நீர் மற்றும் சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதை தடுக்க கோரி, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில்,நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டத்தை அடுத்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கழிவுநீரை, சுத்தப்படுத்தி கால்நடைகள் பாதிக்கா வண்ணம் நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றார்.

ஆனால் இன்றுவரை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து சாக்கடை மற்றும் கழிவுநீர் வந்து கொண்டுள்ளதால், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகிறோம். எனவே தூசூர் ஏரியில் சாக்கடை கழிவுநீர் கலக்காவண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் விவசாய சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும் உள்ளூர் பகுதி பொதுமக்களும் என பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story