குமாரபாளையம்: புதிய தாலுக்கா அலுவலகம் திறக்கப்படுமா?
புதிய வட்டாச்சியர் அலுவலகம்
குமாரபாளையம் புதிய தாசில்தார் அலுவலக கட்டுமான பணிகள் முடிவுற்ற நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா அலுவலகம் 2016, பிப். 27ல் நகராட்சி அண்ணா திருமண மண்டபத்தில் துவக்கப்பட்டது. புதிய தாலுக்கா அலுவலகம் கட்டுமான பணிகள் நகராட்சி அலுவலகம் அருகே பயணியர் மாளிகை வளாகத்தில் ரூ.2 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. நிறைவு கட்டத்தை எட்டிய நிலையில் விரைவில் தாலுக்கா அலுவலகம் திறக்க பல்வேறு தரப்பினர் சார்பில் கோரிக்கை எழுந்தது. தற்போது கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் பெரும்பாலும் நிறைவு பெற்றது. ஆனால் இது இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படாமல் உள்ளது. இந்த கட்டிடம் அ.தி.மு.க.ஆட்சியில் தொடங்கப்பட்டது. தற்போது தி.மு.க. ஆட்சி நடப்பதால், இந்த கட்டிடத்தை யாரைக்கொண்டு திறந்து வைப்பது என புரியாமல் அதிகாரிகள் தவித்து வருகிறார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த கட்டிடம் திறக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
Next Story