குமரி : தேர்தல் பாதுகாப்பு பணியில் 3500 போலீஸ் - எஸ் பி தகவல்
கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து எஸ் பி சுந்தரவதம் நிருபர்களிடம் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இதில் 1500 மாவட்ட போலீசார், 450 கேரளா போலீசார், 200 ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் 350 ஊர்க்காவல் படையினர், 600-க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் முன்னாள் போலீசார் இந்த பாதுகாப்பணியில் ஈடுபடுகிறார்கள்.
ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் அந்தந்த இன்ஸ்பெக்டர் தலைமையில் அதிரடிப்படை ரோந்து போலீசார், எஸ்ஐ -க்கள் தலைமையில் ஒரு ரோந்து படையும் நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாக்குப்பதிவு அன்று அந்தந்த காவல் நிலையப் பகுதிகளில் தொடர்ந்து பணியில் இருப்பார்கள். இது தவிர சப் டிவிஷன் இருக்கும் அந்தந்த ஏ எஸ் பி கள், டிஎஸ்பிக்கள் தலைமையில் தனித்தனி ரோந்து படை, இரண்டு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி ஒரு ஏடிஎஸ்பி தலைமையில் ரோந்து படைகள் நியமிக்கப்பட்டுள்ளன.
ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் மூன்று முக்கிய சந்திப்புகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பார்கள். 17ஆம் தேதி (இன்று) மாலை 6:00 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. அதன் பின்னர் வெளியூர்க்காரர்கள் யாரும் மண்டபங்கள், தங்கு விடுதிகள், இருக்கக் கூடாது. குமரி கேரளா எல்லை மற்றும் திருநெல்வேலி குமரி எல்லை பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படும். இன்று முதல் மதுபான கடைகள் மூடப்படுகின்றன. திருட்டு மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என்று அவர் கூறினார்.