குமரி: 'நம்மை காக்கும் 48 ' திட்டத்தில் 3816 பேருக்கு சிகிச்சை 

குமரி:  நம்மை காக்கும் 48  திட்டத்தில் 3816 பேருக்கு சிகிச்சை 
பைல் படம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் 'இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 ' திட்டம் மூலம் 3816 பேர் பயனடைந்துள்ளதாக ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதோடு, அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவினங்களை குறைக்கும் வகையில் 'இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 ' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உயிர் காக்கும் திட்டத்தின் கீழ் விபத்து நிகழும் பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள 683 மருத்துவமனைகளில் 213.47 கோடி ரூபாய் செலவில் 2.45 லட்சம் நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்பை குறைத்திடும் நோக்கத்தில் விபத்து ஏற்பட்ட 48 மணி நேரத்திற்குள் கட்டணம் இல்லா உயிர்காக்கும் அவசர சிகிச்சை வழங்கும் 'இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 ' திட்டத்தை துவக்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் இந்த திட்டத்தின் வாயிலாக 3 அரசு மருத்துவமனைகள், மற்றும் 14 தனியார் மருத்துவமனைகளில் விபத்தில் பாதிக்கப்பட்ட 3816 நபர்களுக்கு ரூ 4.89 கோடி மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story