குமரி : தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகமாடிய 6-ம் வகுப்பு மாணவன்

குமரி : தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகமாடிய 6-ம் வகுப்பு மாணவன்
பனச்சமூடு போலீஸ் நிலையம்.

கன்னியாகுமரி மாவட்டம் பனச்சமூடு பகுதி சேர்ந்த 11 வயது மாணவன் குமரி - கேரளா எல்லை பகுதி வெள்ளறடையில் ஒரு உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று தேர்வு முடிந்த பின்பு மதியம் சக மாணவர்களுடன் பஸ்ஸில் புறப்பட்டு, பனச்சமூடு பஸ் நிறுத்தத்தில் இறங்கிய மாணவர் திடீரென மாயமானார். உடனடியாக மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பெற்றோர் வெள்ளறடை போலீசில் புகார் கொடுத்தனர். இதற்கிடையில் பளுகல் பகுதியில் ஒரு பெட்ரோல் நிலையம் அருகே மாணவன் சென்று கொண்டிருப்பதை உறவினர் ஒருவர் பார்த்தார். உடனே அவர் மாணவனை அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது மாணவர் தன்னை வெள்ளை மாருதி காரில் வந்த 3 பெண்கள், 2 ஆண்கள் சேர்ந்து காரில் கடத்தியதாகவும், அவர்களிடம் இருந்து தப்பி வந்த தான் கூறியுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்மந்தபட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அவ்வாறு கடத்தல் நடந்த எந்த தடயமும் கிடைகவில்லை. பின்னர் அந்த மாணவனை போலீஸ் நிலையத்திற்கு சென்று மீண்டும் உறவினர்கள் முன்னிலையில் விசாரணை தரப்பட்டது. அப்போது மாணவன் தேர்வு எழுத பயந்ததால் கடத்தல் நாடகமாடிதாக கூறினார். இதையடுத்து போலீசார் மாணவனுக்கு அறிவுரை கூறி, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Tags

Next Story