குமரி : ஏழு ஆண்டாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது

குமரி : ஏழு ஆண்டாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது
கைதான ரவுடி 
ஏழு ஆண்டாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை சென்னையில் பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறை.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள தெங்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன் (40) பிரபல ரவுடியான இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள மது பாரில் நடந்த மோதலில் கொலை செய்யப்பட்டார். இதனை தடுக்க வந்த பார் ஊழியர் ராமர் என்பவரும் இந்த சம்பவத்தின் போது கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் நாகர்கோவில் மறவன் குடியிருப்பு பகுதி சேர்ந்த பிரபல ரவுடி வளன் என்பவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் வளன் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் தலைமறைவாகிவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் வளனை தேடி வந்தனர். கோர்ட்டில் பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் வளன் தலைமறைவாகவே இருந்து வந்தார். இதில் வளன் சென்னையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சுசீந்திரம் போலீசார் சென்னை விரைந்து, வளன் பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர். இன்று காலை அவரை சுசீந்திரம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் கோர்ட்டில் ஆயர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story