குமரி :அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி !
கணினி
கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகல்வித்துறையின் சார்பில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கும் நிகழ்ச்சி இன்று முளகுமூடு புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாளகத்தில் இன்று (08.07.2024) நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை வகித்தார்.
அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கி பேசிகையில்- இந்திய நாட்டின் வருங்காலத் தூண்களாகத் திகழும் மாணவர்களை தனித்திறன்மிக்கவர்களாக உருவாக்கம் உயரிய நோக்கத்தோடு நமது தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை கொண்டுவந்து அவற்றை நல்லமுறையில் செயல்படுத்தியும் வருகிறது.
இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 9 சரகங்களில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தலா ரூ.20,000 மதிப்பில் நாகர்கோவில் சரகம் 178, திருவட்டார் 105, குழித்துறை 99, தக்கலை 113, குளச்சல் 117, கருங்கல் 79, முஞ்சிறை 92, ராஜாக்கமங்கலம் 119, சுசீந்தரம் 105 என ரு.2.15 கோடி மதிப்பில் 1007 கையட மடிகணினிகள் அரசுதொடக்கப்பள்ளியில் பணியாற்றும் அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இக்கணினியை நல்ல முறையில் பயன்படுத்தி அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களின் கல்வித்தரத்தை உயர்த்தி அவர்கள் வாழ்வில் ஏற்றம் பெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் பாலதண்டாயுதபாணி, பள்ளி தலைமையாசிரியர்கள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.