குமரி அம்மன் நகைகள் 50 ஆண்டுகளுக்கு பிறகு சரிபார்ப்பு 

குமரி அம்மன் நகைகள் 50 ஆண்டுகளுக்கு பிறகு சரிபார்ப்பு 

குமரி அம்மன் நகைகள் சரிபார்க்கும் பணி நடந்தது.

குமரி அம்மன் நகைகள் 50 ஆண்டுகளுக்கு பிறகு சரிபார்க்கப்பட்டது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வாய்ந்ததும், பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில் என்றும் பெயர் பெற்றதாகும். பகவதி அம்மனுக்கு வழிபாடு நேரங்களில், திருவிழா காலங்களில் பல கோடிகள் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறுவது வழக்கம். இதில் சில நகைகள் சேதமடைந்ததால் அம்மனுக்கு அணிவிக்காமல் உள்ளது. இந்த நிலையில் தற்போது அனைத்து தங்க நகை வைர நகைகளையும் அம்மனுக்கு அணிவிக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை அடுத்து தற்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு அணிவிக்கும் தங்கம் மற்றும் வைர நகைகள் சரிபார்க்கும் பணி நேற்று கோவிலில் உள்ள கொலுமண்டபத்தில் நடந்தது. இதில் அனைத்து நகைகளும் இருப்பில் உள்ளது தெரிய வந்தது. குறிப்பாக மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மனுக்கு காணிக்கையாக ஒரு கோடி மதிப்புள்ள கிரீடம் மற்றும் தங்கக் காசு மாலை வழங்கியது சேதம் அடைந்துள்ளது தெரிய வந்தது. சேதம் அடைந்த அந்த நகைகளை சீரமைத்து அம்மனுக்கு மீண்டும் அணிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறங்காவலர் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story