கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு
பகவதி அம்மன்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 14-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. 10-ம் திருவிழாவான இன்று அதிகாலையில் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி உற்சவ அம்பாளை கோவிலில் இருந்து மேள தாளத்துடன் ஊர்வலமாக கோவிலின் கிழக்கு வாசல் முன்பு அமைந்துள்ள ஆராட்டு மண்டபத்துக்கு எடுத்து வந்தனர். உற்சவ அம்பாளை மணலிக்கரை மாத்தூர் மட தந்திரி சஜித் சங்கர நாராயணரூ தலைமையில் முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆடி மற்றும் தை அமாவாசை, கார்த்திகை தீபத் திருவிழா, நவராத்திரி விஜயதசமி திருவிழா, வைகாசி விசாகம் ஆகிய 5 முக்கிய விசேஷ தினங்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் காலை 7 மணிக்கு திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசித்த நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்தனர்