குமரி : வாக்காளர் எண்ணிக்கை சரிவு -16 ஆயிரம் பேர் மாயம்

குமரி : வாக்காளர் எண்ணிக்கை சரிவு -16 ஆயிரம் பேர் மாயம்

வாக்காளர் பட்டியல் 

கன்னியாகுமரி நாடளுமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் கடந்த 3 ஆண்டுகளில் 16 ஆயிரத்து 75 வாக்காளர்கள் குறைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 17ஆம் தேதி நிலவரப்படி குமரி மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் சேர்த்து மொத்தம் 15 லட்சத்து 55 ஆயிரத்து 96 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதில் ஆண் வாக்காளர்கள் 7,76,127, பெண் வாக்காளர்கள் 7,78,834, மூன்றாம் பாலினத்தவர்கள் 135 பேரும் இடம் பெற்றிருந்தனர். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் இடம் பெற்றிருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தி 71 ஆயிரத்து 171. இது 2024 தற்போது 15 லட்சத்து 55 ஆயிரத்து 96 ஆக சரிந்துள்ளது. அந்த வகையில் ஒட்டுமொத்தத்தில் 16 ஆயிரத்து 75 வாக்காளர்கள் எங்கே? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏறக்குறைய 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளில் ஏற்படுகின்ற மரணங்கள் காரணமாக வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு எண்ணிக்கை குறைவதுண்டு. அதே வேளையில் ஆண்டுதோறும் புதிய வாக்காளர்களும் பட்டியலில் பெயர் சேர்த்து வருகின்றனர். இதனால் வாக்காளர் எண்ணிக்கை கணிசமாக உயர வேண்டும். அந்த வகையில் வாக்காளர் எண்ணிக்கை உயர வேண்டுமே தவிர குறையாது என்பது கணக்கீடாக உள்ளது. இந்த வகையில் மூன்று ஆண்டுகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்தது கேள்விக்குறியாகி உள்ளது.

Tags

Next Story