குமரி மாவட்டம 96.24 சதவீத தேர்ச்சி 

குமரி மாவட்டம 96.24 சதவீத தேர்ச்சி 

எஸ் எஸ் எல் சி பொதுத்தேர்வில் குமரி மாவட்டம 96.24 சதவீத தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 4-ம் இடம் பிடித்துள்ளது.


எஸ் எஸ் எல் சி பொதுத்தேர்வில் குமரி மாவட்டம 96.24 சதவீத தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 4-ம் இடம் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியிடப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 101மாணவர்கள், 11 ஆயிரத்து 422 மாணவிகள் என 22 ஆயிரத்து 523 பேர் தேர்வு எழுதி இருந்ததில் 10 ஆயிரத்து 466 மாணவர்கள், 11 ஆயிரத்து 210 மாணவிகள் என்று மொத்தம் 21 ஆயிரத்து 676 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 94.28%, மாணவிகள் 98.14 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த வகையில் குமரி மாவட்டம் எஸ்.எஸ்.எல்.சி தேர்தல் 96.24 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மாநில அளவில் தேர்ச்சி விதத்தில் குமரி மாவட்டம் நான்காம் இடத்தை பெற்றுள்ளது. மாவட்டத்தில் 141 அரசு பள்ளிகளில் இருந்து 3374 மாணவர்கள், 3288 மாணவிகள் என்று 6 ஆயிரத்து 662 பேர் தேர்வு எழுதி இருந்தனர். இதில் 3129 மாணவர்கள், 3211 மாணவிகள் என்று 6,340 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags

Next Story