குமரி மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வு: 95.72 சதவீதம் பேர் தேர்ச்சி
மாணவிகள்
தமிழக முழுவதும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 24,560 பேர் தேர்வு எழுதியதில் 20,637 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விழுக்காடு 95. 72 % ஆகும். இதில் 10,149 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 9429 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விழுக்காடு 92.91% ஆகும். 11,411 மாணவிகள் தேர்வு எழுதியதில் 11,208 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 95.72% ஆகும். மாணவர்களை விட மாணவிகளை அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். குமரி மாவட்டத்தில் 63 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது. இங்கு 5912 பேர் தேர்வு எழுதியதில் 5527 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 93.49 சதவீதமாகும். மாணவர்கள் 2850 பேர் தேர்வு எழுதியதில் 2560 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 89. 82 சதவீதம் . மாணவிகள் 3062 பேர் தேர்வு எழுதியதில் 2967 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 96.90 சதவீதம் ஆகும். அரசு பள்ளிகளிலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழக அளவில் குமரி மாவட்டம் 14-வது இடத்தை படித்துள்ளது. கடந்தாண்டு குமரி மாவட்டம் ஏழாவது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.