குமரி மாவட்டத்தில் 226 மில்லி மீட்டர் மழை பதிவு
மழை (பைல் படம்)
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டரை மாத காலத்தில் 226 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை, வட கிழக்கு பருவ மழை என்று இருந்தாலும் குமரி மாவட்டம் ஆண்டு முழுவதும் மழை பொழிவு ஏற்படுகின்ற மாவட்டமாக இருந்து வருகிறது.கோடைகாலமான ஏப்ரல் மே மாதங்களிலும் கணிசமான அளவு மழை பொழிவு காணப்படும். இயல்பாக மார்ச் மாதம் 1.ம் தேதி முதல் மே மாதம் 20 -ம் தேதி வரை இயல்பாக 226.7 மில்லி மீட்டர் மழை பெய்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 226 மில்லி மீட்டர் மழை பெய்து இருந்தது. இது கடந்த இரண்டரை மாத காலத்தில் பெரிய மழை என்பது குறிப்பிடத்தக்கது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story