குமரி மாவட்டத்தில் 451.8 மில்லிமீட்டர் மழை பதிவு

குமரி மாவட்டத்தில் 451.8 மில்லிமீட்டர் மழை பதிவு

குமரி மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் 451.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.


குமரி மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் 451.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மார்ச் 1-ந்தேதி முதல் நேற்று வரை கடந்த 3 மாதத்தில் குமரி மாவட்டத்தில் 451.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இயல்பாக 281.5 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் அதிகமான அளவு மழை கொட்டி தீர்த்துள்ளது. தமிழ்நாட்டிலேயே குமரி மாவட்டத்தில் தான் அதிக அளவு மழை இந்த 3 மாதத்தில் கொட்டி தீர்த்துள்ளது. குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் நிரம்பி வருகின்றன. ஆறுகளிலும், சானல்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து பாசன குளங்களும் மாவட்டம் முழுவதும் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்து இருந்த நிலையில் நேற்று இரவு முதல் இன்று தொடர்ந்து மீண்டும் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக குமரி மேற்கு மாவட்ட பகுதிகனில் கனமழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் நிறைந்துள்ளன.

Tags

Next Story