சேலம் இளைஞரணி மாநாட்டிற்கு குமரி திமுக ரூ.25 லட்சம் நிதி.

சேலம் இளைஞரணி மாநாட்டிற்கு குமரி திமுக  ரூ.25 லட்சம் நிதி.

மாநாட்டு நிதி 

தி.மு.க இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடக்கிறது. அதன் நோக்கத்தை விளக்கும் வகையில் திமுக இளைஞரணியினர் பைக் பேரணி நடத்தி வருகின்றனர் . கன்னியாகுமரியில் தொடங்கிய பைக் பேரணியை திமுக இளைஞரணி செயலாளரும்,அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பைக் ஓட்டி துவக்கி வைத்தார். இந்த விழாவில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சேலம் இளைஞரணி 2-வது மாநாட்டிற்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது. நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் காசோலையாக வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, மனோதங்கராஜ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு,கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story