குமரி: கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பாண்டிகை கொண்டாட்டம்

குமரி:  கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பாண்டிகை கொண்டாட்டம்

சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்ட பெண்கள் 

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டரை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்தனைகள் நடைபெற்றது.

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை இன்று 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவாலயங்களில் இன்று காலை சிறப்பு பிரார்த்தனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நாகர்கோவிலில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு இயேசு உயிர்ப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். மேலும் இந்த உயிர்ப்பு திருப்பலி கன்னியாகுமரி, குளச்சல், திருத்துவபுரம், களியக்காவிளை, தக்கலை, மார்த்தாண்டம் உட்பட்ட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கத்தோலிக்க ஆலயங்களில் நடந்தது. இன்று காலை முதல் சிஎஸ்ஐ உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags

Next Story