குமரி: யானைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு.
நீர்நிலைகளில் யானைகள் கணக்கெடுப்பு
கோதையார்,கீரிப்பாறை உட்பட குமரி மாவட்ட வனப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற யானைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் உத்தரவின் படி ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த மூன்று நாட்களாக நடந்தது. பூதப்பாண்டி, அழகியபாண்டிபுரம், வேளிமலை, குலசேகரம், களியல் ஆகிய ஐந்து வனச்சரக அலுவலர்களின் தலைமையில் கோதையார் கீரிப்பாறை உட்பட வனப் பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கப்பட்டது.
முதல் நாளில் நேரடியாகவும், இரண்டாவது நாள் நேர்கோட்டு முறையிலும், மூன்றாவது நாள் நீர் நிலைகளிலும் கணக்கிடப்பட்டது, நேற்றுடன் யானைகள் கணக்கெடுக்கும் பணி முடிந்தது. குமரி மாவட்டத்தில் மொத்த யானைகளின் எண்ணிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என மாவட்ட வர அலுவலர் பிரசாத் அறிவித்துள்ளார்.
Next Story