ஆழ்கடலில் தவிக்கும் குமரி மீனவர்கள் 

ஆழ்கடலில் தவிக்கும் குமரி மீனவர்கள் 
பைல் படம்
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்று ஆழ் கடலில் தவித்து வரும் 9 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் அருகே உள்ள இரவிபுத்தன்துறை சூசையப்பர் குருசடி வளாகத்தை சேர்ந்தவர் பிராங்கிளின். இவரது விசைப்படையில் அந்த பகுதிகளை சேர்ந்த எட்டு மீனவர்களும், பிராங்கிளினுமாக கடந்த 13ஆம் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ் கடலில் மீன் பிடிக்க சென்றனர்நேற்று ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது விசைப்படகு எஞ்சின் திடீரென பழுதாகி உள்ளது. இதனால் படகை தொடர்ந்து இயக்க முடியவில்லை.

இந்த எதிர்பாராத சம்பவத்தால் மீனவர்கள் திரும்ப முடியாமல் ஆழ்கடலில் பரிதவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அந்த வழியாக சென்ற ஒரு கப்பலில் இருந்தவர்கள் பார்த்து இந்த தகவல்களை மீனவர்களின் குடும்பத்திற்கு தெரிவித்துள்ளனர். மீனவர்கள் ஆழ்கடலில் தத்தளிப்பதை அறிந்த குடும்பத்தினர் பத்திரமாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலன் உள்ளிட்ட அரசு துறையினருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆண்டனி தெரிவித்தார்.

Tags

Next Story