தூத்துக்குடி மீனவர்களுக்கு ஆதரவாக குமரி மீனவர்கள் வேலைநிறுத்தம்

தூத்துக்குடி மீனவர்களுக்கு ஆதரவாக குமரி மீனவர்கள் வேலைநிறுத்தம்
சின்ன முட்டத்தில் படகுகள் வேலை நிறுத்தம்
தூத்துக்குடி மீனவர்களுக்கு ஆதரவாக கன்னியாகுமரி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கன்னியாகுமரி , தூத்துக்குடி பகுதிகளில் தடையை மீறி மீன்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி சின்ன முட்டத்தில் நேற்று மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்குள்ள 350 க்கு மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து அங்குள்ள விசைப்படகுகள் நல உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், - குமரி மேற்கு மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகுகள், கேரளா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த விசைப்படகுகள் அரசு உத்தரவை மீறி, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி நள்ளிரவில் கன்னியாகுமரி கடற்கரை அருகில் வந்து மீன்பிடித்து செல்கின்றனர்.

இதனால் நாட்டுப் படகு மீனவர்கள் உள்ளிட்ட கன்னியாகுமாரி பகுதி மீனவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இது குறித்து பலமுறை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடரும் பட்சத்தில் மீனவர்கள் சார்பில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தார்கள்.

Tags

Next Story