குமரி பறக்கும் படை பறிமுதல்: ரூ. 2 கோடியை கடந்தது 

குமரி பறக்கும் படை பறிமுதல்: ரூ. 2 கோடியை கடந்தது 
X

பணம் பறிமுதல்

குமரியில் பறக்கும் படை பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ. 2 கோடியை கடந்தது .
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பொதுத்தேர்தல் 19ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகத்தை தடுக்க தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 36 குழுவினர் 24 மணி நேரம் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை வரை மொத்தம் 2 கோடியே 6 லட்சத்து 71 ஆயிரத்தி 786 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் சட்டமன்ற தொகுதி வாரியாக இதுவரை கன்னியாகுமரியில் 39 லட்சத்து 81 ஆயிரம் 210 ரூபாயும், நாகர்கோவில் 44 லட்சத்து 82 ஆயிரத்து 595 ரூபாயும், குளச்சலில் 30 லட்சத்து 76 ஆயிரத்து 621 பறி முதல் செய்யப்பட்டது. பத்மநாபபுரத்தில் 12 லட்சத்து 78 ஆயிரத்து 270 , வி Mவங்கோட்டில் 46 லட்சத்து 83 ஆயிரத்து 990, கிள்ளிரில் 31 லட்சத்து 70 ஆயிரத்து 100 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இன்று காலை வரை ஒரு நாளில் மட்டும் 16 லட்சத்து 59 ஆயிரத்து 80 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story