குமரி அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் குமரி அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது
அரசு பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் உயர் கல்வியல் இட ஒதுக்கீடு, கட்டணம் இல்லா ஆங்கில வழி கல்வி உள்ளிட்ட அனைத்து நல திட்டங்களையும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் தமிழக அரசு விரிவுப்படுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகளின் உரிமை சார்பில் கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சவரிமுத்து தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கனகராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார். தென்னிந்திய திருச்சபை பேராயம் கூட்டு மேலாளர் கிரிஸ்டோபர், சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகளின் உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் கண்ணன், டொமனிக் ராஜ், வென்சியா மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக தனியார் பள்ளிச் செயலாளர் பென்சி கர் உட்பட்ட பலர் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினார்கள். மாவட்ட பொருளாளர் பிரேம் குமார் நன்றி கூறினார்.