குமரி ; முக்கடல் சங்கமம் பகுதியில்  தீவிர போலீஸ்  பாதுகாப்பு

குமரி ; முக்கடல் சங்கமம் பகுதியில்  தீவிர போலீஸ்  பாதுகாப்பு

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்

கடல் சீற்றம் தொடர்ந்து வருவதால் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகள் கடலுக்கு அருகே செல்லாமல் தடுத்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு காரணமாக ராட்சத அலைகள் எழும் என்பதால் கடற்கரை பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் கடற்கரை கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி கன்னியாகுமரி, சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், கோவளம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் வழக்கத்துக்கு மாறாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் கடற்கரைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. வள்ளம் மற்றும் நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை மாலையிலேயே கரைக்கு திரும்பி விட்டனா்.

இந்நிலையில் ராஜாக்கமங்கலம் லெமூா் கடற்கரையில் நேற்று கடலுக்குள் இறங்கிய பயிற்சி மருத்துவா்கள் 5 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் பேரூராட்சி பணியாளா்களும், மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் போலீஸாரும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் இன்றும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் நீராட அனுமதி மறுக்கப்பட்டது.

Tags

Next Story