குமரி : வீடு புகுந்து 25 பவுன் நகை கொள்ளை
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே காக்கா தோப்பு பகுதி சேர்ந்தவர் ஐயா குட்டி மகன் முருகானந்தம் (54).அரசு டாஸ்மாக் ஊழியர் இவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியராக உள்ளார். முருகானந்தம் தனது மனைவியுடன் கடந்த 17-ம் தேதி சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை முருகானந்தத்தின் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பக்கத்து வீட்டில் வசித்து வரும் அவரது சகோதரர் பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்துக்கும் சகோதரர் முருகானந்தத்துக்கும் தகவல் கொடுத்துள்ளார். போலீசார் மற்றும் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் விசாரணை நடைபெற்றது. பின்னர் மாலை முருகானந்தம் சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பீரோவில் 24 .5 பவுன் தங்க நகையும் ரூபாய் 50,000 ரொக்கமும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது . இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags
Next Story