குமரி : 3080  பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா

குமரி : 3080  பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா
குமரியில் பட்டா வழங்கிய அமைச்சர்
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட 3080  பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்ட வருவாய்துறையின் சார்பில் கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கி பேசுகையில்:- கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கு பட்டாக்கள் வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இதில் கல்குளம் வட்டத்திற்குட்பட்ட 1875 பயனாளிகளில் 1641 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நலன் இ - பட்டாவும், 234 பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலன் இ - பட்டாவும், விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட 206 பயனாளிகளில் 59 பயனாளிகளுக்கு நத்தம் நிலுவை இனங்கள் பட்டாவும், 147 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நலன் இ - பட்டாவும், திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட 419 பயனாளிகளில் 13 பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 377 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நலன் இ - பட்டாவும், 29 பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலன் இ - பட்டாவும், கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட 580 பயனாளிகளில் 20 பயனாளிகளுக்கு நத்தம் நிலுவை இனங்கள் பட்டாவும், 343 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நலன் இ - பட்டாவும், 41 பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலன் இ - பட்டாவும், 176 பயனாளிகளுக்கு சுனாமி வீட்டுமனை பட்டாவும் என வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பேசினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), செ.ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story