வெட்டி முறிச்சான் இசக்கியம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை

வெட்டி முறிச்சான் இசக்கியம்மன் கோயிலில் 1008  திருவிளக்கு பூஜை
வெட்டி முறிச்சான் இசக்கியம்மன் கோயில் திருவிழா
குமரி அருகே உள்ள வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோயிலில் 60க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து திருவிளக்கு பூஜை நடத்தி சிறப்பித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பெருமாள் புரத்தில் வெட்டி முறிச்சான் இசக்கியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை விழா கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. ஒன்பதாம் திருவிழாவான நேற்று மாலை மூலஸ்தானத்தில் உள்ள இசக்கியம்மனுக்கு தீபாராதனை, பின்னர் இரவு 7 மணிக்கு பெண்கள் 1008 திருவிளக்கு பூஜை நடத்தினர்.

இதில் சுற்று வட்டாரத்தில் 60க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர். பத்தாம் திருவிழாவான இன்று அதிகாலை 5:30 மணிக்கு மூலஸ்தானத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு பூஜையும் தீபாராதனை போன்றவை நடைபெற்றது. மேலும் இன்று இரவு 12 மணிக்கு மூலஸ்தானத்தில் அம்மனுக்கு அலங்கார பூஜை நடக்கிறது. தொடர்ந்து வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் அதன் பரிவார தெய்வங்களோடு நையாண்டி மேளம், சிங்காரி மேளம், செண்டை மேளம் முழங்க கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

Tags

Read MoreRead Less
Next Story