குமரி : விவேகானந்தர் பாறையில் கார்த்திகை மகா தீபம்

குமரி : விவேகானந்தர் பாறையில் கார்த்திகை மகா தீபம்

விவேகானந்தர் பாறை 

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நாளை மறுநாள் (26-ந்தேதி) மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி தனிப்படகில் சென்று அங்கு ஸ்ரீபாத மண்டபத்தில் உள்ள பாறையில் இயற்கையாகவே அமைந்துள்ள பகவதி அம்மன் கால் தடம் பதிந்து இருந்த இடத்தில் விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்படுகிறது. தொடர்ந்து ஸ்ரீபாத மண்டபத்தில் இருந்து கோவில் மேல்சாந்தி கார்த்திகை தீபத்தை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து ஸ்ரீபாதமண்டபத்தின் மேற்கு பக்கம் கடற்கரையில் உள்ள பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசலை நோக்கி மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. விவேகானந்தர் பாறையில் ஏற்றப்படும் கார்த்திகை மகா தீபம் விடியவிடிய எரிந்து கொண்டே இருக்கும்.

Tags

Next Story