குமரி : பைனான்சியரை கொன்று நகை, பணம் கொள்ளை - ஒருவர் கைது

குமரி : பைனான்சியரை கொன்று நகை, பணம் கொள்ளை - ஒருவர் கைது
கொலை செய்யப்பட்ட ஜேம்ஸ்
கன்னியாகுமரி மாவட்டம், பரக்குன்று பகுதியைச் சேர்ந்தவர் தங்கைய்யன். இவரது மகன் ஜேம்ஸ் (54). வட்டிக்குபணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். ஜேம்ஸ்க்கு ஜெயராணி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். நேற்று இவரது மனைவி மற்றும் மருமகள் தேவாலயத்துக்கு சென்றிருந்தனர். ஜேம்ஸ் மட்டும் வீட்டில் இருந்தாராம். அப்போது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்த நபர் ஜேம்ஸிடம் தகராறு செய்ததுடன் கத்தியால் அவரது கழுத்தை அறுத்ததுடன் தலையிலும் வெட்டிவிட்டு, வீட்டில் இருந்த ரூ. 3 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ஏழரை சவரன் தங்க நகைகளையும் எடுத்துச் சென்றனர். மதியம் அவரது மனைவி, மருமகள் ஆகியோர் வீட்டுக்கு வந்த போது, வீட்டில் ரத்த காயத்துடன் மயங்கி கிடந்த ஜேம்ஸை மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பளுகல் போலீஸார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மருதங்கோடு பகுதியைச் சேர்ந்த யோவான் என்பவரின் மகன் சுரேஷ், ஜேம்ஸை கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து விசாரித்ததில் ஜேம்ஸை கொலை செய்ததுடன் பணம், நகையை திருடியதையும் ஒப்புக்கொண்டார். போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Tags

Next Story