குமரி : 226 மீனவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர்

கன்னியாகுமரி மாவட்ட கடலோரப்பகுதி மீனவர்கள் தங்களது நிலங்களையும் வரன்முறைப்படுத்தி, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்கள்.
அம்மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் சிங்காரவேலர் திட்டத்தின் கீழ் கிள்ளியூர் சட்டமன்றத்திற்குட்பட்ட நீரோடி, மிக்கேல்புரம், அன்னை நகர் ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த 176 பயனாளிகள் மற்றும் குளச்சல் சட்டமன்றத்திற்குட்பட்ட கடியபட்டணம் கிராமத்தைச் சேர்ந்த 50 பயனாளிகள் என 4 மீனவ கிராமங்களை சார்ந்த 226 மீனவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் இன்று வழங்கப்பட்டது.
கிள்ளியூர் வட்டம், சுகந்தம் கலையரங்கத்தில் இன்று (16.12.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் இலவச வீட்டுமனை பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமிணயம், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), செ.ராஜேஷ் குமார் (கிள்ளியூர்), நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
