குமரி: ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்க எதிர்ப்பு

குமரி:  ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்க எதிர்ப்பு

ஆர்ப்பாட்டம் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகள் உள்ளன. இதில் 11 ஊராட்சிகளை பேரூராட்சிகளாகவும், 34 ஊராட்சிகளை நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுடன் இணைப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் நேற்று குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு குமரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் நல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் அஜித்குமார் தலைமை வகித்தார். மற்றும் ஊராட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் 95 ஊராட்சிகளை சேர்ந்த பெண்கள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் போரட்டத்தில் பங்கேற்றனர். இதனால் கலெக்டர் அலுவலக சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை மறித்து போராட்டம் நடத்தியதால் போலீசுக்கும் போராட்ட காரர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இது குறித்து போராட்ட காரர்கள் கூறுகையில், - தற்போதைய நிலையில் 45 ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கும் போது , குமரியில் ஊராட்சிகள் எண்ணிக்கை 50- ஆக குறைந்து விடும். இதனால் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் பாதிப்படையும். குறிப்பாக ஊராட்சி பகுதிகளில் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஏராளமான பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். அவர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்படும். எனவே மக்கள் நலன் கருதி இந்த முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என கூறினர்.

Tags

Read MoreRead Less
Next Story