குமரியில் காய்கறி விலை கிடு கிடு உயர்வு - தக்காளி கிலோ ரூ.80 

குமரியில் காய்கறி விலை கிடு கிடு உயர்வு - தக்காளி கிலோ ரூ.80 

காய்கறி விற்பனை (பைல் படம்)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. தக்காளி, பீன்ஸ், சின்ன வெங்காயம், கேரட் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரத்து குறைவால் காய்கறிகள் உயர்ந்து வருகிறது. திண்டுக்கல், ஓசூர், பெங்களூரு போன்ற பகுதிகளிலிருந்து குமரி மாவட்டத்திற்கு தக்காளி கொண்டு வரப்படும். ஆனால் தற்போது இதன் வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை அதிகரித்துள்ளது. கிலோ ரூபாய் 50, 55 - க்கு விற்பனையான தக்காளி தற்போது ரூபாய் 80 ஆக உயர்ந்துள்ளது. நாட்டு தக்காளி கிலோ 70 ஆக உயர்ந்துள்ளது. பீன்ஸ், கேரட் விலைகளும் உயர்ந்துள்ளன.

ஒரு கிலோ பீன்ஸ் விலை 120 லிருந்து 150 ஆகவே உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை 80 ஆகியுள்ளது. வெண்டைக்காய், தடியங்காய் உள்ளிட்டவைகள் விலைகளும் உயர்ந்துள்ளன. தற்போது ஆனி மாதம் முகூர்த்த நாட்கள் என்பதால் காய்கறி விலைகள் இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த மாதம் ஆடி மாதம் கோவில் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆவணி மாதம் முகூர்த்த நாட்கள் அதிகம் வரும். மேலும் திருவோண பண்டிகையும் கொண்டாடப்படும். எனவே இனிவரும் நாட்களில் காய்கறிகளின் தேவை அதிகரித்து வரும் என்பதால் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறினார்.

Tags

Next Story