குமரி ரப்பர் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம்

குமரி ரப்பர் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம்
ரப்பர் விவசாயிகள் கூட்டம்.
விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டம் ரப்பர் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் குலசேகரத்தில் நடைபெற்றது. மார்த்தாண்டம் ரப்பர் வாரிய வளர்ச்சி அலுவலர் முரளி வரவேற்றார்.ரப்பர் வாரிய இணை இயக்குனர்கள் மேத்யூ, வினு மேத்யூ, பினோய் குரியன், உதவி வளர்ச்சி அலுவலர் ஆனந்தகுமார், இளநிலை பண்ணை அலுவலர் விஜய கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ரப்பர் விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளிடம் ரப்பர் மசோதா - 2022 குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதில் குமரி தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்திலிருந்து ரப்பர் விளை நிலங்களை நீக்க வேண்டும், ரப்பரின் விலையை அதிகரிக்க வேண்டும், கேரள மாநிலத்தில் வழங்குவது போன்று ரப்பருக்கு ஆதரவு விலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த இந்திய ரப்பர் வாரிய நிர்வாக இயக்குனர் வசந்தகேசன் பதிலளித்து பேசுகையில், - குமரியில் தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்திலிருந்து ரப்பர் விலை நிலங்களை நீக்கம் செய்வது சம்பந்தமாக ரப்பர் வாரியம் தேவையான நடவடிக்கை எடுக்கும். குமரியில் ரப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைக்க விரைந்து முடிவு எடுக்கப்படும். ரப்பர் வாரிய மண்டல அலுவலகத்தை மார்த்தாண்டத்திலிருந்து குலசேகரத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags

Next Story