குமரி : நம்பர் பிளேட் இல்லாத லாரிகளில் கனிம வளம் கடத்தல் 

குமரி :  நம்பர் பிளேட் இல்லாத லாரிகளில் கனிம வளம் கடத்தல் 
நம்பர் பிளேட் இல்லாமல் கனிம வளம் கடத்தும் லாரிகள்
கன்னியாகுமரியில் நம்பர் பிளேட் இல்லாத கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக டாரஸ் லாரிகளில் ஏராளம் கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்துவது தொடர்கதையாக நடந்து வருகிறது. குறிப்பாக தினமும் 1000 க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவுக்கு கனிம வளங்களை கடத்துவதால் தினமும் விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதை அடுத்து டாரஸ் லாரிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் டாரஸ் லாரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக அதிக எடையுடன் கூடிய கனிமவள லாரிகள் செல்வதால் அந்த பாலம் சேதமடைந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக டாரஸ் லாரிகள் போன்றவை தற்போது இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் தற்போது மெயின் சாலைகள் வழி செல்லாமல் கிராமப்புறச் சாலைகள் வழியாக கனிமவளங்கள் கடத்துவதாக புகார்கள் உள்ளன.

இந்த நிலையில் கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை கொட்டாரம் பகுதிகளில் தற்போது நம்பர் பிளேட் இல்லாமல் கனிம வளங்கள் கடத்துவதாக புகார் எழுந்துள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் கனிம லாரிகளில் தற்போது நம்பர் பிளேட் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்த நம்பர் பிளேட் இல்லாத லாரிகள் இயங்குவது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Tags

Next Story