யூபிஎஸ்சி தேர்வில் குமரி மாணவர் சாதனை
ஹேவிஸ்
பள்ளியாடி முருங்கவிளையை சேர்ந்தவர் சார்லஸ். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி ரேசில் ஜெயகீதா இவர் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் இயற்பியல்துறை பேராசிரியராக பணியாற்று கிறார்.இந்த தம்பதியின் மகன் ஹேவிஸ்.இவர் நாகர்கோவில் சிஎஸ்ஐ மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பள்ளி கன்னியாகுமரி மாவட்டம் படிப்பை முடித்தார். அப்பொழுது பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 500 க்கு 495 மார்க் பெற்று சாதனை படைத்தார்.பிளஸ் டூ தேர்வில் 1200 க்கு 1175 மார்க் பெற்று சாதனை தொடர்ந்தது.
பின் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ முடித்தார். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்து சாப்ட்வேர் கம்பெனியிலிருந்து வேலை வாய்ப்புகள் கிடைத்தும் செல்லாமல் ஐஏ எஸ் தேர்வில் வெற்றி பெறவேண்டும் என உறுதியாக இருந்தார்.இரண்டு ஆண்டுகள் வீட்டிலிருந்து யூ டியூப் மற்றும் டெஸ்ட் சீரிஸ் தேர்வுகள் எழுதி தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். தற்பொழுது அகில இந்திய அளவில் 792 வது ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார்.விடாமுயற்சியும் கடுமையான உழைப்பும் திட்ட மிட்டு குறிக்கோளை நோக்கி பயணம் மேற்கொண்டால் எதையும் சாதிக்கலாம் என ஹேவிஸ் தெரிவித்தார். விடா முயற்சிக்கு கடவுள் தந்த பரிசாகவே இதை நான் நினைக்கிறேன் என மேலும் கூறினார்.