குமரி : சாலைப்பணிகளை அமைச்சர் இன்று துவங்கி வைத்தார்

குமரி : சாலைப்பணிகளை அமைச்சர் இன்று துவங்கி வைத்தார்
சாலை பணி துவக்கிய அமைச்சர் மனோதங்கராஜ்
ரூ.12 கோடி மதிப்பில் சாலைப்பணிகளை அமைச்சர் இன்று  துவங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலை துறையின் சார்பில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , இன்று (02.02.2024) துவக்கி வைத்து தெரிவிக்கையில்:- கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைதுறையின் சார்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5 பகுதிகளில் சாலைகள் சீரமைக்கும் பணியினை துவக்கி வைக்கப்பட்டது. அதனடிப்படையில் ரூ.48 இலட்சம் மதிப்பில் ஐரேனிபுரம் - நட்டாலம் வரையுள்ள சாலை சீரமைக்கும் பணிகள், ரூ.62 இலட்சம் மதிப்பில் ஐரேனிபுரம் – விரிகோடு சாலைப்பணிகள், ரூ.5.3 கோடி மதிப்பில் குழித்துறை முதல் ஆலஞ்சோலை வழியாக அருமனை செல்லும் பகுதியில் உள்ள சாலை பணிகள், ரூ.95 இலட்சம் மதிப்பில் மருதங்கோடு சாலைப்பணிகள், ரூ.4.9 கோடி மதிப்பில் மார்த்தாண்டம் முதல் பனிச்சமூடு வரையிலான சாலைப்பணிகள் என மொத்தம் ரூ.12.25 கோடி மதிப்பிலான சாலைப்பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. என கூறினார். நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கன்னியாகுமரி மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை திருக்கோவில்களின் தலைவர் ராஜன், குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன்.ஆசைதம்பி, மரிய சிசு குமார், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story