குமரி : பிரமாண்ட கிறிஸ்மஸ் குடிலை திறந்து வைத்த அமைச்சர்

குமரி : பிரமாண்ட கிறிஸ்மஸ் குடிலை  திறந்து வைத்த அமைச்சர்
கிறிஸ்மஸ் குடிலை  திறந்த வைத்த  அமைச்சர்.
பாலப்பள்ளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எருசலேம் வடிவிலான பிரமாண்ட கிறிஸ்மஸ் குடிலை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக வீடுகளில் சீரியல் குடில்கள் தெரு வீதிகளில் அலங்காரம் என களைகட்ட துவங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக பாலப்பள்ளம் பகுதியில் சுமார் 40 லட்ச ரூபாய் பொருட்செலவில் வைக்கோல், கம்பிகள், சிமெண்ட் போன்ற உபகரணங்களால் புதிய எருசலேம் வடிவில் பிரமாண்ட கிறிஸ்மஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிலின் உட்பகுதிகளில் இயேசு பாலனின் பிறப்பு முதல் சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்து நியாயவிசாரிப்பு வரையிலான சுருபங்கள் காட்சிப்படுத்த பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த குடிலை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார். மேலும் திறப்பு விழாவிற்கு வருகை தந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோருக்கு ஆளுயர மாலை அணிவித்தும், செண்டை மேளம் முழங்க சிறப்பான வரவேற்பும் அளித்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் குடிலினை கண்டுகளித்தனர்.

Tags

Next Story