குமரி : போக்குவரத்து கழக தொழில் பயிற்சி மையத்தில் பயிற்சி

குமரி : போக்குவரத்து கழக தொழில் பயிற்சி மையத்தில் பயிற்சி

பைல் படம் 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தொழில் பயிற்சி மையத்தில் நடக்கும் தொழிற்பயிற்சி வகுப்பில் சேர போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம் என நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் மெமர்லின் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குமரி மாவட்டம், நாகர்கோவில் மண்டலம் ராணி தோட்டத்தில் இயங்கி வரும் தொழிற்பயிற்சி மையத்தில் கம்மியர் (மெக்கானிக் ) மோட்டார் வாகனம் தொழில் பிரிவுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 42வது அணியின் பயிற்சி காலம் ஆகஸ்ட் 2024 முதல் ஜூலை 2026 ஆகும். இந்த போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற பணியில் இருக்கும் போது மரணம் அடைந்த மற்றும் தற்போது பணி புரிகின்ற தொழிலாளர்களின் நேரடி வாரிசுகள் இடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சிக் காலம் இரண்டு ஆண்டுகளாகும். வயது குறைந்தபட்சம் 15 வயது, அதிகபட்சம் 25 வயது வரை விண்ணப்பிக்கலாம். எஸ் டி எஸ் டி பிரிவினருக்கு அதிகபட்சம் 27 வயது. எஸ் எஸ் எல் சி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். உயரம் 137 சென்டிமீட்டர், எடை 32 கிலோ இருக்க வேண்டும். பயிற்சி கட்டணம் ரூபாய் 300. காப்பு கட்டணம் ரூபாய் 100 செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பம் முதல்வர், தொழில் பயிற்சி மையம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், நாகர்கோவில் மண்டலம், ராணி தோட்டத்தில் இலவசமாக பெற்று, பணிபுரியும் அல்லது பணிபுரிந்த அலுவலக மேலாளிடமிருந்து சான்று பெற்று பொது மேலாளருக்கு ஜூலை 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம் வேண்டுவோர் தங்கள் பணிபுரிந்த, பணிபுரியும் அலுவலரிடம் அத்தாட்சி பெற்று வருவதுடன், வாரிசுக்கான சான்றாக போக்குவரத்து கழக மருத்துவ அட்டையும் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்று பொது மேலாளர் மெமர்லின் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story