குமரித் தென்றல் நற்பணி மன்ற ஆண்டு விழா

குமரித் தென்றல் நற்பணி மன்ற ஆண்டு விழா
X
விழாவில் குளச்சல் ஏஎஸ்பி பரிசு வழங்கினார்
கன்னியாகுமரி மாவட்டம்,சரல்விளையில் குமரித்தென்றல் நற்பணி மன்ற 15ம் ஆண்டு தொடக்க விழாவில் ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே குஞ்சாகோடு, சரல்விளையில் குமரித்தென்றல் நற்பணி மன்றம் இயங்கி வருகிறது. இந்த மன்றத்தின் 15 வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் 2 தினங்கள் நடைபெற்றது. முதலாவது நாள் விழாவில் தேசிய கொடியேற்றுதல், சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், சிலம்பப் போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து மாணவ மாணவிகளின் மாறுவேட போட்டிகள், இரவில் சிறுசேமிப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாம் நாள் காலையில் இலவச மருத்துவ முகாமை முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி துவக்கி வைத்தார். தொடர்ந்து பள்ளிகள் அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, டி20 கிரிக்கெட் போட்டி போன்றவை நடைபெற்றன. பிற்பகல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வடமிழுத்தல் போட்டி நடைபெற்றன.

இரவில் பொதுக்கூட்டம் மற்றும் பரிசு வழங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு மன்ற ஆலோசகர் வழக்கறிஞர் சிசில்தாஸ் தலைமை வகித்தார். செயலாளர் சிவப்பிரகாஷ் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக குளச்சல் சரக துணை காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள், நலஉதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேலும் இளைஞர் மன்றம் சார்பில் உடல் நலம் பாதித்த சிறுமி ஒருவருக்கு மருத்துவ உதவியையும் வழங்கினார். எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான டாக்டர். பிரியதர்ஷினி, கன்னியாகுமரி மாவட்ட பிரஸ் கிளப் தலைவர் ஆர்.பி ஜாண் ஆகியோர் நலத்திட்ட உதவிகள் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.

Tags

Next Story